டிவி நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் கைதான ஷீசன்கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை துனிஷா சர்மா (வயது21) ‘அலி பாபா: தாஸ்தன்-இ-காபூல்’ டி.வி. தொடருக்காக கடந்த 24-ந் தேதி வசாயில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். திடீரென அவர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது முன்னாள் காதலனும், சக நடிகருமான ஷீசன் கானை (27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை காலம் முடிந்து இன்று போலீசார் அவரை வசாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். முன்னாள் காதலன் ஷீசன் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் டி.வி. நடிகை துனிஷா சர்மாவை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக அவரது தாய் வனிதா சர்மா குற்றம்சாட்டி இருந்தார். துனிஷா சர்மா மரணத்தை கொலை வழக்கமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.