அமைச்சராக பொறுபேற்ற பின் தொகுதிக்கு வந்த நடிகை : 30 கிலோ மீட்டர் ஊர்வலமாக அழைத்து சென்று அமோக வரவேற்பு அளித்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 1:26 pm

ஆந்திரா : அமைச்சராக பொறுப்பேற்ற பின் தொகுதிக்கு வந்த ரோஜாவுக்கு நகரி மக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆந்திர மாநில சுற்றுலா, இளைஞர் நலன், கலை பண்பாடு ஆகிய துறைகளுக்கான ஆந்திர அமைச்சர் ஆக பொறுப்பேற்றிருக்கும் ரோஜா நேற்று மாலை முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊரான நகரிக்கு வந்தார்.

திருப்பதி விமான நிலையத்திலிருந்து நகரி வரை அவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர்,ஆதரவாளர்கள் ஆகியோர் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

நகரியில் உள்ள ஓம்சக்தி வார வழிபாட்டு மன்ற ஆதிபராசக்தி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி கும்பிட்டார்.

பின்னர் பேசிய அவர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவதுடன் மக்களுக்கு குறிப்பாக என்னை நம்பி வாக்களித்த தொகுதி மக்களுக்கு இயன்றவரை நன்மைகளை செய்வேன் என்று கூறினார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 1360

    0

    0