அடேங்கப்பா… அமேசானை பின்னுக்கு தள்ளிய அதானி : உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய இந்தியாவின் பணக்காரரான கவுதம் அதானி..!!
Author: Udayachandran RadhaKrishnan16 September 2022, 2:26 pm
இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆனார். அப்போது ஆசியாவிலேயே உலகின் முதல் 3 இடத்திற்கும் வந்த முதல் நபர் என்னும் சிறப்பை பெற்றார்.
தற்போது அதானி குழும பங்குகளான அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பல பங்குகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றன.
இதனால் அக்குழும தலைவர் அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்து வருகின்றன. இந்தாண்டு மட்டும் அவரின் நிகர சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், போர்ப்ஸ்-ன் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, உலகின் 2வது பெரும் பணக்காரரானார் அதானி.
கவுதம் அதானியின் இன்றைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 45 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வரும் டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.21.88 லட்சம் கோடியாக உள்ளது.