2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் குவிந்த பக்தர்களின் கூட்டம்… மலைக்க வைத்த உண்டியல் வசூல்…!!
Author: Babu Lakshmanan30 மே 2022, 11:34 காலை
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாட்களில் 1 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று குறைவு மற்றும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி காரணமாக கூட்டம் அலை மோதுகிறது.
இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 89 ஆயிரத்து 318 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக 3 கோடியே 76 லட்ச ரூபாய் செலுத்தினர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதிகப்படியாக ஒரே நாளில் 90 ஆயிரத்து 885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூபாய் 4 கோடியே 18 லட்சம் செலுத்தினர். இன்று பக்தர்கள் வருகை சற்று குறைந்ததை அடுத்து, காலை நிலவரப்படி வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு 18 அறைகள் நிரம்பி 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
0
0