ரகசிய திருமணம் செய்து 11 வருடம் குடும்பம் நடத்திவிட்டு வேறு நடிகையுடன் தொடர்பு.. இளம் நடிகர் மீது இளம்பெண் புகார்.!
Author: Udayachandran RadhaKrishnan6 July 2024, 6:22 pm
தெலுங்கு திரைப்பட ( டோலிவுட் ) இளம் ஹீரோ ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ் தருண் நடித்த ‘திரகபாதரா சாமி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ராஜ் தருண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப உடல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு 11 ஆண்டுகளாக ஒரு கோயிலில் திருமணம் செய்து ஒன்றாக இருந்தோம் என லாவண்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராஜ் தருண் தனது படத்தில் நடிக்கும் கதாநாயகியுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும் 3 மாதங்களுக்கு முன்பு ராஜ் வீட்டை விட்டு வெளியேறி, வெளியூரில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.
தன்னை கைவிடாவிட்டால் கொலை செய்து உடல் இருக்கும் இடம் கூட தெரியாமல் அழித்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக லாவண்யா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
மேலும் ராஜ் தருண் தான் தனது உலகம் என்று குறிப்பிட்டுள்ள லாவண்யா முன்பு போதைப்பொருள் வழக்கில் தன்னை சிக்க வைத்து கைது செய்யப்பட்டு 45 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், அப்போது ராஜ் தனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.