அக்னிபாதை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… யாரெல்லாம் தகுதியுடையவர்கள் தெரியுமா..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
24 June 2022, 9:05 am

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அக்னிபாதை என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதாவது, 17.5 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு பீகார், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ரயில்களுக்கு தீவைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு 12ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழும், மாநில காவல்துறை மற்றும் ஆயுதப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு அளித்துள்ளது. அதோடு, இந்தத் திட்டத்தில் பணியாற்றி, 4 ஆண்டுகளை நிறைவு செய்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த நிலையில், விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இன்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 632

    0

    0