புதிய வசதிகளுடன் ரூ.1,470 கோடி மதிப்பில் இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 1:31 pm

பிரதமர் மோடி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த நிலையில், பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார். அதன்பின், எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் பார்வையிட்டு வருகிறார்.


பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!