நெருங்கும் தீபாவளி.. உச்சத்தில் காற்று மாசுபாடு.. ஆட்டம் காணும் தலைநகரம்!

Author: Hariharasudhan
19 October 2024, 12:21 pm

டெல்லியில் காற்று தரக் குறியீடு 226 என்ற நிலைக்கு வந்துள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு எப்போதும் அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, செப்டம்பர் மாத பிற்பகுதியில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் காற்று மாசுபாட்டின் அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன்படி, இன்றைய நிலவரப்படி, டெல்லியில் காற்று தரக் குறியீடு 226 என ‘Poor’ நிலையில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : ஸ்டாலினிடம் ஒரேயொரு கேள்வி தான்.. கடுப்பான தமிழிசை!

இதில் அதிகபட்சமாக டெல்லியின் அக்சார்தம் மற்றும் ஆனந்த் விஹார் பகுதிகளில் காற்று தரக் குறியீடு 334 என்ற ‘Very Poor’ வகையில் உள்ளது. இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று தரக் குறியீடு 253 என்ற நிலையில் உள்ளது. அதேபோல், டெல்லிவாசிகள் மற்றும்க் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக புழங்கும் இந்தியா கேட் பகுதியில் காற்று தரக் குறியீடு 251 என்ற நிலையில் உள்ளது.

மேலும், கடந்த 2 நாட்களாக காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதால் தொண்டை மற்றும் சுவாசக்கோளாறு வருவதாகவும், சில நேரங்களில் கண் எரிச்சல் ஏற்படுவதாகவும் டெல்லிவாசிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், தற்போதே காற்று மாசுபாட்டின் அளவு இவ்வாறு இருக்கும்போது, தீபாவளிக்குப் பிறகு எப்படி இருக்கும் எனவும் மக்கள் புலம்புகின்றனர். எனவே, பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் டெல்லிவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், யமுனா நதியில் ரசாயன நுரை பொங்கி ஓடுகிறது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?