திருப்பதி கோவில் உச்சியில் அடுத்தடுத்து பறந்த விமானங்கள்… தேவஸ்தானம் அதிர்ச்சி… பரபரப்பு.. பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 4:48 pm

நேற்று அன்னதான சத்திரத்தின் உச்சியில் விமானம் பறந்தது, இன்று கோவிலுக்கு மிக அருகில் உள்ள கொல்லமண்டபத்தின் மேல் விமானம் பறந்தது. இதனால் திருமலை திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தேவஸ்தான நிர்வாகம் பல முறை மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. ஆகம சாஸ்திரப்படி ஸ்ரீவாரி கோயிலில் விமானங்கள் பறக்கக் கூடாது என்று ஆகம சாஸ்திர நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் திருமலையில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் அலட்சியப்போக்கால் திருமலையில் தொடர்ந்து விமானங்கள் பறந்து வருகின்றன.

இது குறித்து ரேணிகுண்டா விமான நிலைய அதிகாரிகள், தங்களுக்கு மையத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என பதில் அளித்துள்ளனர். இதனால் திருப்பதி திருமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!