அடுத்த டார்கெட் அகிலேஷ் யாதவ்? சுரங்க வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் : உ.பி.யில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 4:25 pm

அடுத்த டார்கெட் அகிலேஷ் யாதவ்? சுரங்க வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் : உ.பி.யில் பரபரப்பு!

உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டவிரோத சுரங்க வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அகிலேஷ் யாதவுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் நாளை டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி வழக்கு தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலளிக்க அகிலேஷ் யாதவ் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் 2012 முதல் 2017 வரை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும், 2012 முதல் 2013 வரை மாநிலத்தின் சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

டெல்லியில் கலால் கொள்கை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் , டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 286

    0

    0