நாம் எல்லோரும் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும்.. தயாராக இருங்கள் : கட்சியினருக்கு முதலமைச்சர் திடீர் அறிவுறுத்தல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 5:23 pm

நாம் எல்லோரும் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும்.. தயாராக இருங்கள் : கட்சியினருக்கு முதலமைச்சர் திடீர் அறிவுறுத்தல்!!!

டெல்லி அரசு மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள நிலையில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கதுறை முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை அனுப்பிய சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால் இந்த முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கெஜ்ரிவால், நாம் ஒரு போராட்டத்தை எதிர்கொள்கிறோம், ஆனால் அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறேன்.

சிறையில் இருக்கும் நமது தலைவர்கள் ஐந்து பேரும் எங்களுடைய ஹீரோக்கள், அவர்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். வேறு எந்தக் கட்சிகளும் கவனம் செலுத்தாத விஷயங்களில் கவனம் செலுத்தியதால், குறுகிய ஆண்டுகளிலேயே அரசியலில் ஆம்ஆத்மி கட்சி உயர்ந்துள்ளது.

குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது என்று நீங்கள் பேசினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

நாட்டிலேயே முதன்முறையாக இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்களுக்கு உண்மையான மாற்றம் கிடைத்துள்ளது. நாங்கள் வெற்றிபெறவில்லை அல்லது நல்லது செய்யவில்லை என்றால், எங்கள் கட்சித் தலைவர்கள் யாரும் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள், இன்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் என அவர் பேசினார்.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…