ரயில்களை இயக்க முடியாது.. கையை விரித்த ரயில்வே துறை : மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 11:59 am

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் நடப்பதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலவரம் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் வரையில் மணிப்பூருக்கு ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் மோரே கிராமத்தில் குக்கி, மைத்தேயி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

இரு இனங்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல்வேறு வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கியிரையாக்கப்பட்டுள்ளன. கலவரம் காரணமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூரில் இணைய சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்களை கண்டவுடன் சுட மணிப்பூர் ஆளுநர் மாநில உள்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கலவரத்தை அடக்கும் நோக்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் நடப்பதால் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 470

    0

    0