மராட்டியத்தில் இண்டியா கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. சரிக்கு சமமாக தொகுதிகளை பிரித்ததால் காங்கிரஸ் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2024, 1:57 pm

மராட்டியத்தில் இண்டியா கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. சரிக்கு சமமாக தொகுதிகளை பிரித்ததால் காங்கிரஸ் உற்சாகம்!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல பணிகள் படுததீவிரமாகி உள்ளது. தொகுதிப் பங்கீடு, கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் அறிவிப்பு என அடுத்தடுத்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே டெல்லி, ஹரியானா, கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதியாகி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், பிரகாஷ் அம்பேத்கர் கட்சி 2 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் நான்கில் சிவசேனா அணி (UBT) போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி கூட்டணி (இந்தியா கூட்டணி) 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது குறித்து இன்னும் 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

  • Tamil actress Sana Khan updates பிரபல நடிகை மீண்டும் கர்ப்பம்..கோலிவுட்டில் பரபரப்பு..!
  • Views: - 251

    0

    0