நோயாளிக்கு ஊசி போட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் : அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 4:29 pm

மருத்துவமனையில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மருத்துவமனையில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில்அரங்கேறியுள்ளது. மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

வீடியோ வைரலானதையடுத்து காதாரத்துறை இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் கூறும்போது, மாவட்ட மருத்துவமனையின் அவசர மருத்துவ அறையில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு நோயாளிக்கு ஊசி போடுவதைக் வீடியோவில் பார்த்திருப்பீர்கள்.

இந்த சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் நடவடிக்கை எடுக்கும் விதமாக அவசர மருத்துவ அறைக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரி, டாக்டர் மற்றும் அங்கு நியமிக்கப்பட்டுள்ள மற்ற மருத்துவ பணியாளர்கள் ஆகியோரிடம் உடனடி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 440

    0

    0