இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா… நவீன இந்தியாவின் தேசத்தந்தை பிரதமர் மோடி ; அம்ருதா பட்னாவிஸ் புகழாரம்!!
Author: Babu Lakshmanan21 December 2022, 10:01 pm
மும்பை: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியாக இருந்தாலும் நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் மனைவி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். மிகவும் பிரபலமான இவர், பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்து கொள்வார். குறிப்பாக, இந்திய போர்க்கப்பலை பார்வையிட்ட போது, கப்பலின் ஓரத்தில் பாதுகாப்பு எதுவுமின்றி புகைப்படம் எடுத்த சம்பவத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார்.
இந்தநிலையில், இந்தியாவின் தேசத்தந்தை தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
அவர் பேசியதாவது :- நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள். நமது நாட்டிற்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல, புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு 2 தேச தந்தைகள் இருக்கிறார்கள், என கூறியுள்ளார்.