கை நிறைய காசு.. வெளிநாட்டு வேலை.. பாலைவனத்தில் சிக்கித் தவித்து மோசடி வலையில் சிக்கிய நபர் மீட்பு..!

Author: Vignesh
17 July 2024, 3:58 pm

ஆந்திரா: வயிற்றுப் பிழைப்புக்காக குவைத்திற்கு வேலைக்கு சென்று பாலைவனத்தில் சிக்கித் தவித்த ஆந்திர தொழிலாளி சிவாவை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவா ஏஜென்ட் ஒருவர் மூலம் ஆடு மேய்க்க தொழில் செய்ய குவைத்துக்கு சென்றிருந்தார். அவரை அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவனம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஷெட்டில் அடைத்து வைத்த குவைத் முதலாளி அங்கிருக்கும் ஆடுகள், வாத்துக்கள் ஆகியவற்றை பார்த்து கொள்ளும் வேலையை ஒப்படைத்து இருந்தார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லாமல் பாலைவனத்தின் நடுவே சிக்கி தவித்த சிவா தன்னுடைய நிலை பற்றி வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோ வேகமாக பரவி ஊடகங்கள் மூலம் ஆந்திர அரசின் காதுகளுக்கு எட்டியது.

அவரை விரைவில் மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று ஆந்திர அமைச்சரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆன நாரா லோக்கேஷ் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியின் வெளிமாநில அணியினர் அவரை தொடர்பு கொண்டு குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு தூதரகத்திற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில், அவர் அங்கிருந்து விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இன்று மதியம் சொந்த ஊரை அடைந்தார். அவரை மீட்க உதவிய அனைவருக்கும் அவரும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 242

    0

    0