இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தெரிவித்தனர்.
மல்யுத்த வீராங்கணைகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வந்த வண்னம் உள்ளன.இந்த நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் கூறி போராடி வரும் மல்யுத்த விரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நள்ளிரவில் சந்தித்து பேசியுள்ளனர்.
டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் நள்ளிரவு தாண்டி சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஜ்ரங் புனியா, சாக்ஷி, மாலிக், வினேஷ், போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரியும் பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் டெல்லி காவல்துறை விரைவாக இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க அமித்ஷாவிடம் மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.