திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் தரிசனம் : குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 11:22 am

32 ஆம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் தமிழக பாமக இளைஞரணி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்தாருடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

இன்று 32 ஆம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வேத ஆசீர்வாதம் தீர்த், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவரை அவர் குடும்பத்தாருடன் கோயில் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

  • Kalpana has crossed the danger stage அபாய கட்டத்தை தாண்டினார் கல்பனா… சுயநினைவு திரும்பியதால் விசாரணையை ஆரம்பித்த போலீஸ்!
  • Close menu