அமெரிக்காவில் ஆந்திர ஜோடி திருமணம்… பெற்றோர்களுக்கு நேர்ந்த சோகம் : இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் LIVE TELECAST!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 2:33 pm

ஆந்திரா : விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து திருமணத்தை கண்ட பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பர்வத ரெடி ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி (வயது 23). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் திருப்பதி நாயுடு பேட்டையைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா (வயது 21) என்பருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அமெரிக்காவில் அமெரிக்க நேரப்படி மே 21 தேதியும் இந்திய நேரப்படி 22 தேதி திருமணம் நடைபெற இருந்தது.

அமெரிக்கா சென்று திருமணத்தில் கலந்துகொள்ள மணமக்கள் பெற்றோர் விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் விசா கிடைக்காத காரணத்தினால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நாயுடு பேட்டை பகுதியில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய திரையரங்கம் என்றும் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கம் ஆக கருதப்படும் வி செல்லுலாயிட் நிறுவனத்தின் வி ஏபிக் திரையரங்கத்தை திருமண நிகழ்ச்சியை காண முன்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை மணமக்கள் மணக்கோலத்தில் மணமேடைக்கு வந்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் காட்சிகள் அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திரையில் ஒளிபரப்பப்பட்டது.

மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் திருமணத்தை திரையில் கண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த மிகப்பெரிய திரையரங்க திருமண நிகழ்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 894

    0

    0