கை,கால்களை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம் : போலீசாரையே சுத்தலில் விட்ட கோர சம்பவம் : விசாரணை தீவிரம்!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 5:40 pm

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே நபர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி பாலத்தின் அடியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாகப்பட்டினம் மாவட்டம் அனக்கா பள்ளி சமீபத்தில் உள்ள கொத்தபள்ளம் கிராமம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் நபர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டிய மர்ம நபர்கள், உடல் பாகங்களை அங்குள்ள பாலத்தின் அடியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் வீசி சென்று விட்டனர்.

அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் தண்ணீரில் உடல் பாகங்கள் மிதப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனக்காப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நபர் யார்..? அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய நபர்கள் யார், யார்..? என்று விசாரணை நடத்துகின்றனர். கொலை நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா? 
  • Close menu