பேட்டரி பேருந்தை அபேஸ் செய்த நபர்… பயத்தில் பாதி வழியில் விட்டுவிட்டு சென்ற சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 10:09 am

திருப்பதி மலையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இலவச பேருந்தை கடத்திச் சென்ற நபர், அதனை பாதி வழியில் நிறுத்தி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி மலையில் இருந்து மின்சாரத்தால் இயங்கும் இலவச பேருந்து ஒன்றை அதிகாலை கடத்தி சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்தையும் அதை ஓட்டிச் சென்ற நபரையும் தீவிரமாக தேடி வந்தனர்.


இந்த நிலையில் அந்த பேருந்தை கடத்தி சென்றவர் நெல்லூர் சமீபத்தில் நாயுடு பேட்டை அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பேருந்தை மீட்டனர். அந்த பேருந்தை திருப்பதி மலையில் இருந்து கடத்தி சென்று சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?