சாலையில் கவிழ்ந்த மீன் லாரி… துள்ளித்துடித்த மீன்கள்… சக்கரங்களுக்கு இரையான கோர காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 12:49 pm

ஆந்திரா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மீன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் மீன்கள் துள்ளிக்குதித்தன.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து மீன்கள் ஏற்றப்பட்ட லாரி தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டு உயிருடன் இருந்த மீன்கள் சாலையில் சிதறி துள்ளித்துடித்தன.

இதனால் அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் சாலையில் சிதறி உயிருடன் துள்ளி கொண்டிருந்த மீன்கள் மீது வாகனங்களை ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை முன்னோக்கி செலுத்த இயலாமல் அவதி அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் சாலையில் சிதறி கிடந்த மீன்களை ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!