மலை மீது அமைந்துள்ள கல்குவாரியில் திடீர் நிலச்சரிவு… சாலைக்கு உருண்டோடி வந்த பாறைகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Author: Babu Lakshmanan
3 June 2022, 8:53 am

ஆந்திராவில் மலை மீது அமைந்திருக்கும் கல்குவாரியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெண்துர்த்தி மண்டலம் துவ பாளையத்தில் மலை மீது அமைந்துள்ள கல்குவாரியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் நிலச்சரிவு காரணமாக கல்குவாரி அருகே உள்ள சாலை வரை மணல் கற்கள் ஆகியவை சரிந்து வந்த காரணத்தினால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிலச்சரிவு சமயத்தில் குவாரியில் தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இளைஞர்கள் சிலர் நிலச்சரிவை பதட்டத்துடன் வீடியோ பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!