சாலையில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு லாரியில் தீவிபத்து ; கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து எலும்புக்கூடான சம்பவம்!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 8:48 pm

திருப்பதி: ஆந்திரா அருகே நடுரோட்டி சரக்கு லாரி ஒன்று தீவிபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஆதங்கி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பெரிய சரக்கு லாரி திடீரென்று தீப்பற்றி முழுவதுமாக எரிந்து எலும்பு கூடானது. லாரி என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தி கீழே இறங்கி விட்டார்.

இந்த நிலையில், என்ஜின் பகுதியில் இருந்து பரவிய தீ லாரி முழுவதும் தொற்றி எரிய துவங்கியது. இதனை கவனித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். அதற்குள் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த சரக்குகளும் லாரியுடன் மொத்தமாக எரிந்து சாம்பலாக்கி விட்டன. தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ஆதங்கி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!