கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம் ; 5 பேர் பலி… 11 பேர் படுகாயம்!!

Author: Babu Lakshmanan
15 September 2023, 11:05 am

ஆந்திர பிரதேசத்தில் லாரியும், வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அன்னமயா மாவட்டத்தில் உள்ள பெத்தம்பள்ளி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 11 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!