ஆந்திர மாநில அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

Author: Rajesh
21 February 2022, 10:35 am

ஐதராபாத்: ஆந்திர பிரதேச மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்.

ஆந்திரபிரதேச மாநில தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் மேகபதி கவுதம் ரெட்டி. இந்நிலையில், இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். முன்னதாக கவுதம் ரெட்டி நேற்று துபாயில் இருந்து இந்தியா வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு திடீரென மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த அமைச்சர் கவுதம் ரெட்டி, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப்பிரதேச சட்டப் பேரவை உறுப்பினரானவர்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!