தாத்தா, பாட்டி கால வழக்கத்திற்கு மாறிய திருப்பதி… லட்டு பிரசாதம் குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 4:53 pm

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின் லட்டு பிரசாதம் வாங்கி செல்வது அனைவரின் வழக்கம். சாமி தரிசன வாய்ப்பு கிடைக்க தவறினாலும் கூட லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்கள் தவறுவதே கிடையாது.

அந்த அளவிற்கு ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

ஆனால் இனிமேல் நம்முடைய தாத்தா பாட்டி ஆகியோர் பொருட்களை வாங்கி செல்ல பயன்படுத்திய ஓலை புட்டிகளை பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவிற்றால் தயார் செய்யப்பட்ட ஓலை புட்டிகளை லட்டு விற்பனை கவுண்டர் சமீபத்தில் கவுண்டர்களை அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை புட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்று நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 647

    0

    0