மீண்டும் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 பெட்டிகள் தடம் புரண்டு கோரம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2023, 10:26 am
மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது .
இந்த விபத்தில் ஒரு ரெயிலில் இருந்த ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரெயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ரெயில்களும் காலியாக இருந்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக கரக்பூர் – பாங்குரா – ஆத்ரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.