புகழ் பெற்ற கடப்பா தர்காவில் ரஜினிகாந்த்துடன், ஏஆர் ரகுமான் : பிரபலங்களின் வருகையால் சூழ்ந்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 1:36 pm

திருப்பதி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கடப்பா தர்க்காவில் வழிபாடு நடத்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையான வழிபட்டார்.

தொடர்ந்து திருப்பதி மலையில் இருந்து அவர் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு சென்றார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்து சேர்ந்தார்.

இரண்டு பேருக்கும் தர்கா முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு பேரும் தர்காவில் வழிபாடு நடத்தினர்.

ஒரே நேரத்தில் புகழ்பெற்ற இரண்டு பிரபலங்கள் வந்ததால் அவர்களை காண ஏராளமான குவிந்து இருந்தனர். எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!