இந்தியாவில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களா? CM ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா? வெளியான பட்டியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2023, 9:29 pm

இந்தியாவில் 28 மாநிலங்கள் டெல்லி புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை தவிர்த்து மீதமுள்ள 30 முதலமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தப் பட்டியலில் சொத்து மதிப்பில் முதலிடத்தில் உள்ளவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவருக்கு ரூ.510 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

2வது இடத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார். அவருக்கு ரூ.163 கோடி சொத்துகள் உள்ளது.

3வது இடத்தில், ஒடிசாவின் நவீன் பட்நாயக் ரூ.63 கோடி சொத்துகளுடன் உள்ளார். 4வது இடத்தில் நாகலாந்து முதல்வர் ரூ.46 கோடி சொத்துக்களுடனும், 5வது இடத்தில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடனும் உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 6வது இடத்திலும் (ரூ.23 கோடி), சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 7வது இடத்திலும் (ரூ.23 கோடி), அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா 8வது இடத்திலும் (ரூ.17 கோடி), மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா 9வது இடத்திலும் (ரூ.14 கோடி), திரிபுரா முதல்வர் மாணிக் சகா 10வது இடத்திலும் (ரூ.13 கோடி) அடுத்தடுத்து உள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.8 கோடி சொத்துக்களுடன் 14வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஆனால், இந்தப் பட்டியலில் வெறும் லட்சாதிபதியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார். அவரிடம், ரூ.15 லட்சத்திற்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெர்விக்கப்பட்டுள்ளது.

இவரை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் பாஜகவைச் சேர்ந்த 11 முதல்வர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர்.

அந்த வரிசையில் பார்த்தால், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.163 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் அசாம் முதல்வரும் (ரூ.17 கோடி), 3வது இடத்தில் திரிபுரா முதல்வரும் (ரூ.13 கோடி) உள்ளனர். கோவா முதல்வர் ரூ.9 கோடி சொத்துக்களுடனும், கர்நாடகா மற்றும் குஜராத் முதல்வர்கள் ரூ.8 கோடி சொத்துக்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், தற்போதுள்ள 30 முதல்வர்களில் 13 பேர் (43%) மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குற்ற வழக்குகள் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் என ஏடிஆர் தெரிவித்துள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 487

    0

    0