இனி இந்தியா முழுவதும் அரைநேரம் மட்டுமே பள்ளிகள் இயங்கும்? மத்திய அரசு போட்ட ஆர்டர்… தமிழக அரசு எடுக்கும் முக்கிய முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2022, 8:39 pm

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பள்ளி வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும், பள்ளியில் நடத்தப்படும் வழிபாடு நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும் என்றும், பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும், முதலுதவி பெட்டி அவசியம், முடிந்த அளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம் என்றும் மத்திய கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…