காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா, பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் சத்தீஸ்கரில் நடக்கும் காங்., மாநாட்டிற்காக செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார்.
அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர்., தகவலை காண்பித்தனர்.
தொடர்ந்து போலீசார் கேட்டு கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில், விமான ஊழியர்கள், என்னிடம் வந்து, எனது பையில் பிரச்சினை உள்ளது என்றும், கீழே இறங்க கூறினர். என்னிடம் பை இல்லை எனக்கூறியதும், உங்களுக்கு விமானத்தில் செல்ல அனுமதி இல்லை. போலீஸ் அதிகாரி வந்து சந்திப்பார் எனக்கூறி கீழே இறக்கிவிட்டனர் என்றார்.
இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து துணை ராணுவப்படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். விமானம் கிளம்பி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் முன் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய பவன்கேராவுக்கு அனுமதி மறிக்கப்பட்டதால் சுர்ஜேவா, வேண்டுகோபால் உள்ளிட்டோரை சத்தீஸ்கர் செல்லவிருந்த விமானம் முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.