லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 14 பேர் உடல்நசுங்கி பலி… அதிகாலையில் நிகழ்ந்த சோகம்!!
Author: Babu Lakshmanan3 January 2024, 10:51 am
லாரியும், சுற்றுலாப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் – அதுஹெல்யா பகுதியில் இருந்து பலிஜன் நகருக்கு 45 பேர் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணியளவில் மார்கரிடா பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் கண் இமைக்கும் நேரத்தில் சுற்றுலா பேருந்து மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில், பேருந்து சுக்குநூறாக போனதால், அதில் பயணித்த 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.