கணவனை தாக்கி கர்ப்பிணி மனைவியை கூட்டுப்பாலியல் செய்த கொடுமை : கதவை தட்டியும் திறக்காத ரயில்வே போலீசார்..ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 11:48 am

ஆந்திரா : ரயில் நிலையத்தில் கணவனை தாக்கி கர்ப்பிணி மனைவியை கூட்டுப்பாலியல் செய்த கொடுமை. ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தின் கதவு தட்டியும் எழுந்திருக்காத போலீசார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஏர்ராகொண்டபாளையம் வெங்கடாத்ரி புறம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான ஒரு தம்பதியினர் சனிக்கிழமை இரவு ரேப்பள்ளி ரயில் நிலையத்தில் வந்து இறங்கினர்.

கிருஷ்ணா மாவட்டம் நாகையாலங்கா பகுதிக்கு கூலி வேலை செய்வதற்காக அவர்கள் வந்தனர். இரவு நேரத்தில் நாகையாலங்கா செல்ல பேருந்து கிடைக்காது என்பதால் அந்த தம்பதியினர் ரயில் நிலையத்தில் உள்ள மேசையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது குடிபோதையில் ரயில் நிலையத்திற்கு உள்ளே வந்த மூன்று பேர் கணவனை கடுமையாக தாக்கி அந்த பெண்ணை தரதர என்று ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். தடுக்கச் சென்ற கணவனை கடுமையாக தாக்கினர்.

அங்கிருந்து தப்பிய கணவர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்றார். வெகு நேரம் கதவை தட்டியும் காவல்நிலையத்தில் கதவு திறக்காததால் அருகில் இருந்த சில பெண்களிடம் உதவி கேட்டார்.

அவர்கள் வர மறுப்பு தெரிவித்து அருகிலுள்ள காவல் நிலையம் குறித்து தகவல் அளித்தனர். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

தொடர்ந்து ரயில் நிலையம் வந்த காவலர்களின் வாகன சைரன் சத்தத்தைக் கேட்ட மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்றுபேரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அந்தப் பெண் கர்ப்பிணி என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய கணவர் ரேபல்லே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கணவனை தாக்கி கர்ப்பிணி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!