தெலங்கானாவில் மர குடோனில் ஏற்பட்ட தீவிபத்து: பீகார் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி பலி..!!

Author: Rajesh
23 March 2022, 11:20 am

தெலங்கானா: செகந்திராபாத்தில் உள்ள மர கிடங்கு விற்பனை கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள போயகுண்டா பகுதியில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

image

நேற்று வேலை முடிந்த பின் வழக்கம் போல் அவர்கள் கடைக்கு உள்ளே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் பழைய மரங்களும் இருந்தன. மின்கசிவு காரணமாக ஏற்பட்டது என்று கருதப்படும் தீ மளமளவென்று பரவி கடை முழுவதும் பற்றி எரிய துவங்கியது.

12 பேர் கடைக்கு தூங்கி கொண்டிருந்த நிலையில் அவர்களில் 11 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகி விட்டனர். ஒருவருக்கு தீவிர காயங்களுடன் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?