ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருந்தே கொலை முயற்சி.. நடுரோட்டில் சுயேட்சை வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல்!

Author: Hariharasudhan
18 அக்டோபர் 2024, 12:21 மணி
Sand Mining
Quick Share

ஆந்திராவில், மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த சுயேட்சை வேட்பாளர் மீது நடுரோட்டில் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஶ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் அமதலவலசா சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் சுரேஷ் தூசி. இவர், ரகோலு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைத்து கடத்துவதாக இணை ஆட்சியருக்கு திங்கட்கிழமை நடந்த மனு நீதிநாள் முகாமில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை தாசில்தார் பறிமுதல் செய்துள்ளார்.

இந்நிலையில், மணல் முறைகேடுகள் குறித்து புகார் அளித்த சுரேஷ், தனது நண்பர் சந்திரா என்பவர் உடன் தனது காரில் ரகோலு பகுதிக்குச் சென்றுள்ளார்ர். பின்பு, அங்கு நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அலமாஜிபேட்டையைச் சேர்ந்த அசோக், புருஷக்ஷத்தபுரம் சாய் உள்பட 30 பேர் அங்கு வந்து, அவரை தாக்க முயன்றுள்ளனர். எனவே, சுரேஷ் அங்கிருந்து காரில் தப்ப முயற்சி செய்துள்ளார். அதேநேரம், அங்கிருந்து அவர் ரூரல் காவல் நிலையத்திற்குச் செல்ல இருந்த நிலையில், சுரேஷ் காரின் பின்னால் வந்த அசோக் மற்றும் சாய் ஆகியோர் அவரை வழிமறித்துள்ளனர். இதனால் காரை வேகமாக ஓட்டிச் சென்று எஸ்பி அலுவலகத்திற்குச் செல்ல முயன்றுள்ளார்.

MLA Murder Plan - News Tamil

ஆனால் அதற்குள் ஸ்ரீகாகுளம் பாலகா அருகே காரின் குறுக்கே பைக்கை வைத்து காரை நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல காரை வேகமாக இயக்க முயன்றபோது, சிலர் வந்து காரின் கண்ணாடிகளை உடைத்து தாக்கியுள்ளனர். இருப்பினும், அதிலும் சுரேஷ் மீண்டும் தப்பி ஓட முயன்ற போது, அங்கு வந்த சில நபர்கள், சுரேஷை காரில் இருந்து இழுத்து அருகில் உள்ள கால்வாயில் வீசி சரமாரியாக தாக்கி உள்ளனர். அப்போது அங்கு வந்த காவலர் கோவிந்த ராவ், சுரேஷைக் காப்பாற்றி, இரண்டாவது நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து சுரேஷை சிகிச்சைக்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இருந்தே மணல் முறைகேடுகளுக்கு எதிராக போராடி வருகிறேன். ஆட்சி மாறிய பிறகு மணல் எடுப்பதை தடுத்து வருவதால், எம்எல்ஏ குணா ரவிக்குமாருக்கு ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். நானும், என் தந்தை, தாத்தா என குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், ஆளும் கட்சி எம்எல்ஏவான ரவிக்குமார் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அமைச்சரின் உதவியாளர் : வீடியோ லீக்.!!

மேலும், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி எஸ்சி, எஸ்டி வழக்குப்பதிவு செய்து தன்னை தாக்க முயன்றதாகவும், பின்னர் தான் தப்பியோடியதாகவும் அவர் கூறினார். அதேபோல், தாக்குதல், கொலை முயற்சி குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்பியிடம் புகார் அளித்தும் பொருட்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

  • Seeman சீமான் ROCKED… பாஜக SHOCKED : நிருபர்கள் கேள்விக்கு பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Views: - 51

    0

    0

    மறுமொழி இடவும்