நீதி கேட்டு போராடிய பெண்களை உயிருடன் புதைக்க முயற்சி : பாதி உடல் மூடிய நிலையில் பொதுமக்களால் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 2:11 pm

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் இரண்டு பேரை உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்த தாலம்மா, சாவித்திரி ஆகியோரின் வீட்டுமனையை அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய 3 பேர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.

வீட்டுமனையை திரும்ப கொடுக்க கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டுமனையை ஒப்படைக்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஆனந்தராவ், பிரகாஷ்ராவ், ராமராவ் ஆகிய மூன்று பேரும் டிராக்டர்களில் மண்ணை அள்ளி வந்து அவர்கள் மீது கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றனர்.

இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இரண்டு பெண்களையும் மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பலாசா போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ