தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி.. வாக்கு இயந்திரங்கள் உடைப்பு : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகள் மோதல்!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2024, 11:27 am
தேர்தலில் கள்ள ஓட்டு போட முயற்சி.. வாக்கு இயந்திரங்கள் உடைப்பு : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நிர்வாகிகள் மோதல்!
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தின் சித்தூர், கடப்பா உள்பட 4 மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் முறைகேடு செய்ய முனைவதாக 2 கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டி கொண்டதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!
மேலும், இந்த மோதலில் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, மாநிலத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இருகட்சி தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் நிலவி வருவதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.