32 வயது என கூறி இளைஞரை திருமணம் செய்த AUNTY : ஒரு வருடம் கழித்து காத்திருந்த ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2024, 12:52 pm
இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்த நடுத்தர வயது பெண் ஒருவர், ஒரு வருடம் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது
குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது அவரது மனைவியின் வயது 32 என பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
அந்த பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டை பெண் வீட்டார் காட்டியுள்ளனர். இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்ல : திமுக அரசை விளாசி அண்ணாமலை போட்ட பதிவு!
அப்போது இயற்கையான முறையில் அப்பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பெண்ணிற்கு குறைந்தது 40 – 42 வயது இருக்கும் என்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியானது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியான கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து மோசடி செய்து திருமணம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அவரது மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.