‘பாபர் சாலை’ பலகையில் ‘அயோத்தி சாலை’ ஸ்டிக்கர் : இந்து சேனா அமைப்பினரின் ஒட்டியதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2024, 2:24 pm
பாபர் சாலை பலகையில் அயோத்தி சாலை ஸ்டிக்கர் : இந்து சேனா அமைப்பினரின் செயலால் பரபரப்பு!!
மத்திய டெல்லியில் பாபர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் பெயரை குறிக்கும் வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாபர் சாலை பெயர் பலகையை சேதப்படுத்திய இந்து சேனா அமைப்பினர் அதில் அயோத்தி சாலை என எழுதியுள்ளனர். பாபர் சாலை என்று எழுதப்பட்டிருந்த பலகையின் மேலே அயோத்தி சாலை என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, பாபர் சாலை என்ற பெயரை மாற்ற வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருவதாக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.