இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம்… விழாக்கோலம் பூண்டது அயோத்தி… திரும்பும் இடமெல்லாம் காவிக்கொடி, ஜெய் ஸ்ரீ ராம் வாசகம்..!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 8:39 am

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. நண்பகல் 12.20 மணியளவில் ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கிறது.

இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை தீபாவளி போன்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் ராமர் கோவில் மட்டுமின்றி, அயோத்தி நகரமே அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளன.

கோவிலை நோக்கிய பிரதான சாலைகளான ராம பாதை, தர்ம பாதைகளில் செல்வோர்கள், காவிக்கொடிகளை ஏந்தியவாறு செல்கின்றனர். இதற்காக, அங்குள்ள கடைகளில் காவிக் கொடிகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அதோடு, அயோத்தி நகரங்களில் உள்ள வீடுகள், கடைகள், விடுதிகளில் காவிக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு இடங்களில் ஸ்ரீராமர், அனுமன், ஜெய் ஸ்ரீ ராம் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களும், ரஜினிகாந்த், விக்கி கௌசல், கத்ரினா கைஃப், ரன்பீர் கபூர், அலியா பாட், ராம் சரன், சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 386

    0

    0