சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களே இத மட்டும் பண்ணாதீங்க : கேரள அரசு வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 10:55 am

அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கேரள மோட்டார் வாகனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள கூடாது. அதேபோல் மோட்டார் சைக்கிள்களிலும் பம்பைக்கு செல்லக்கூடாது.இதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் செய்வது ஆபத்தானது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 447

    0

    0