ரயில் கழிவறையில் கேட்ட குழந்தை சத்தம்.. கதவை திறந்து பார்த்த பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி : தொப்புள் கொடியுடன் ஆண் சிசு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 7:11 pm

ஆந்திரா : பிறந்த பச்சிளம் குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நேற்று காலை தன்பாத் அலேபி (13351) விரைவு ரயில் கழிப்பறையில் ஆண் சிசு ஒன்று உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் கழிப்பறையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் மீட்டு விசாகப்பட்டினம் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளதை உறுதி செய்த அதிகாரிகள், பெற்றோர்கள் குழந்தை வளர்க்க முன்வந்தால் குழந்தை வளர்ப்பிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu