மருத்துவ பரிசோதனை காரணமாக ஜாமீனை நீட்டிக்க வேண்டும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 10:46 am

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை.

இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் கடந்த , மே 10ஆம் தேதியன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரையில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மக்களவை தேர்தல் நடைபெறுவதை சுட்டிக்காட்டியும், நீதிமன்ற கோடை விடுமுறையை குறிப்பிட்டும் இந்த இடைக்கால ஜாமீன் வழங்ப்பட்டதாக கூறப்பட்டது.
இன்னும் சில தினங்களில் இடைக்கால ஜாமீன் முடிந்து ஜூன் 2இல் கெஜ்ரிவால் சரணடைய வேண்டிய சூழல் இருக்கும் வேளையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனு அளித்துள்ளார் அரவிந்த் கெஜிரிவால்.

மேலும் படிக்க: குட்டையில் குளித்த போது மகள்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.. காப்பாற்ற போராடிய தந்தை : முடிவில் சோகம்!

மருத்துவ காரணங்களை மேற்கோள் காட்டி இந்த கோரிக்கையை கெஜ்ரிவால் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!