ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு பாலாபிஷேகம் செய்து பல்லக்கில் ஊர்வலம் : கிராம மக்கள் செய்த வினோத நிகழ்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 3:48 pm

ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு பாலாபிஷேகம் செய்து பல்லக்கில் ஊர்வலம் : கிராம மக்கள் செய்த வினோத நிகழ்வு!!

ஆந்திர மாநிலம் மண்டியம் மாவட்டம் பார்வதிபுரம் மண்டலம் பி. சக்கரப்பள்ளி கிராம மக்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய எம்.எல்.ஏவுக்கு பாலாபிஷேகம் செய்து புஷ்ப பல்லக்கியில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இது குறித்த கிராம மக்கள் தெரிவிக்கையில் கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. சிறு சிறு தேவைகளுக்கு கூட கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வந்தோம்.

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் கிராமத்திற்கு சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்வது வழக்கம்.

இந்த வரிசையில் நடந்த 2019 தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் இக்கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய சென்றனர். அதன் ஒரு பகுதியாக, பார்வதிபுரம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ., அழஜாங்கி ஜோகராவ், கிராமத்துக்கு சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவர் எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த அயராது பாடுபட்டார் . கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபட்டார்.

இந்த சூழலில், பி. சக்கரப்பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தினார். சுமார் நான்கரை கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டு, சுமார் இரண்டு கோடி சிறப்பு நிதி செலவிடப்பட்டு நிலக்கீல் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது.

ரோடு அமைக்கும் பணியில், உள்ளூர் பிரச்னைகளை சமாளித்து, ரோடு கட்டி முடிக்கப்பட்டது இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் புஷ்ப பல்லக்கியில் மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இதனால் ஆந்திரா அரசியலில் பெரும் வரவேற்பை எம்எல்ஏ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 459

    0

    0