இந்தியா முழுதுவம் 18 மருந்து நிறுவனங்களுக்கு தடை… உரிமத்தை ரத்து செய்து டிஜிசிஐ அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan13 ஏப்ரல் 2023, 1:29 மணி
நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் (டி.ஜி.சி.ஐ.) சார்பில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் போலி மருந்துகளை தயாரித்ததற்காக 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
இவற்றில் மிக அதிக அளவாக, இமாசல பிரதேசத்தில் 70 நிறுவனங்கள், உத்தரகாண்டில் 45 நிறுவனங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் 23 நிறுவனங்கள் மீது போலி மருந்துகள் தொடர்புடைய அரசின் அதிரடி சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மாத்திரைகள், கேப்சூல்கள், இருமல் மருந்துகள், ஊசிகள், புரத பவுடர்கள், ஒப்பனை பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு எதிராக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றின் உற்பத்தியையும் நிறுத்தும்படி கூறியுள்ளது.
நாட்டில் போலி மருந்துகள் தயாரிப்புடன் தொடர்புடைய மருந்து நிறுவனங்களில் இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
1
0