ஆன்லைன் ரம்மி: கொல்லப்பட்ட சிறுமி: நிலைகுலைந்த குடும்பம்: இனியாவது மாறுமா….!!
Author: Sudha16 August 2024, 5:00 pm
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், கெரேபிடியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ்.கார் ஓட்டுநர், இவருடைய மனைவி ஸ்வேதா தனியார் பள்ளி ஆசிரியர். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான ஸ்ரீனிவாஸ், பலரிடம் லட்சக் கணக்கில் கடன் பெற்று விளையாடி பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து பிரச்சினை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த தம்பதி, முட்புலா கிராமத்தில் உள்ள கால்வாயில் தங்களின் மகளை வீசி கொன்றனர்.பின்னர் தாங்களும் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மூவரையும் காணவில்லை எனக்கூறி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில், தம்பதி இருவரையும் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, தம்பதியின் 13 வயது மகளான நாகஸ்ரீயை போலீசார் கால்வாயின் வழித்தடம் வழியே தேடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.