பீடியை பற்ற வைத்த போது அஜாக்கிரதை : அலறி ஓடிய முதியவர்.. பற்றி எரிந்த தெரு ; ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 7:17 pm

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து லிட்டர் கேன் ஒன்றில் பெட்ரோல் வாங்கிய நபர் ஒருவர் அந்த பெட்ரோல் கேனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்றார்.

பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த நபர் பெட்ரோல் கேனை மோட்டார் சைக்கிள் மீது வைத்து விட்டு கடைக்குள் சென்று இருந்தார்.

அப்போது பெட்ரோல் கேன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து அதில் இருந்த 5 லிட்டர் பெட்ரோல் சாலையில் கொட்டியது.

அதே நேரத்தில் அங்கு ஏதோ பேசி கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவர் திடீரென்று பீடியை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்தார்.

பின்னர் பீடி பற்ற வைக்க பயன்படுத்திய தீக்குச்சியை அசால்டாக சாலையில் வீசி எறிந்தார்.

சாலையில் கொட்டி கிடந்த பெட்ரோல் மீது பட்ட தீக்குச்சி பெறும் தீ விபத்தை ஏற்படுத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஒரு கடை ஆகியவை தீயில் எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.

அங்கிருந்தவர்கள் உடனடியாக பக்கெட்களில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

  • என் கணவருடைய எனர்ஜி 10 ஆளுக்கு சமம்…வெளிப்படையாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி..!