தேர்தல் ஆணையம் நியாயமாக இல்லை… தயாரா இருங்க : இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே அனுப்பிய அவசர கடிதம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 12:00 pm

தேர்தல் ஆணையம் நியாயமாக இல்லை… தயாரா இருங்க : இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே அனுப்பிய அவசர கடிதம்!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தல் 26-ந் தேதியும் நடந்தது. இரு கட்டங்களிலுமாக 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.

அடுத்ததாக 3-வது கட்ட தேர்தல் குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன.

மேலும் படிக்க: அரசு பேருந்தில் கேட்பாரின்றி கிடந்த 10 சவரன் நகை.. ஓட்டுநரின் சமயோஜிதம் : உடனே நடந்த TWIST!

இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம். தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டு கடமையாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 324

    0

    0