ரயில்வே நிலையத்தில் புகுந்த கரடி : பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2022, 12:34 pm

ஆந்திரா : பலாச ரயில்நிலையத்தில் திடீரென புகுந்த கரடியால் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாச ரயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கரடி ஒன்று புகுந்தது. ரயில் நிலைய நடைமேடை பகுதிகளில் கரடி சுற்றித் திரிவதை கண்டு அங்கு ரயில் பயணத்திற்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் மற்றும் ரயில் நிலையம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கரடி எங்கிருந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!